முகப்பு
திருச்சி

கோடைகால பயிற்சி முகாம் ஏப்.26-இல் தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாம் ஏப். 26 ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:57 am IST
பகிர்:

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாம் ஏப். 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்திலுள்ள 16 வயதுக்குள்பட்ட  பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டில்  ஆர்வமுள்ள  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாமை ஏப். 26 முதல் மே 16 வரை 21 நாள்களுக்கு  திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடத்த உள்ளது. காலை 6.30 மணி முதல் காலை 8.30, மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை  நடைபெறும் முகாமில்  தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து,  கையுந்துப் பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, தேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களைக்  கொண்டு பயிற்சியளிக்கப்படும்.
  கல்வி மாவட்ட அளவில் உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் மூன்று கல்வி மாவட்டங்களிலும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. 
திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், முசிறி , லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி நடைபெறும். சிறப்பாக பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு அண்ணா விளையாட்டரங்கத்தில் மே 2 முதல் 16 ஆம் தேதி வரை  இருப்பிடப் பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0431-2 420685.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.