கோட்டப்பாளையத்தில் தேவாலய தேர்த் திருவிழா
கோட்டப்பாளையத்தில் 300 ஆண்டு பழமையான புனித மகதலா மரியா தேவாலய ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை பெரிய தேர்த் திருவிழாவுடன் நிறைவடைந்தது.
கோட்டப்பாளையத்தில் 300 ஆண்டு பழமையான புனித மகதலா மரியா தேவாலய ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை பெரிய தேர்த் திருவிழாவுடன் நிறைவடைந்தது.
கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜூலை 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஒன்பது நாள் தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் நடைபெற்ற நவநாள் திருப்பலி நிகழ்ச்சியில் திருச்சி மலையடிப்பட்டி அம்புரோஸ், ஆத்தூர் கிரகோரிராஜன், பாண்டிச்சேரி கோனாங்குப்பம் அருள்தாஸ், கும்பகோணம் பீட்டர் பிரான்ஸிஸ், பெரம்பலூர் ராஜமாணிக்கம், வேளாங்கண்ணி பசலிக்கா அதிபர் பிரபாகரன் ஆகிய அருள் தந்தையர் உரையாற்றினர். சனிக்கிழமை (ஜூலை 21) சேலம் மறை மாவட்ட ஆயர் எஸ்.சிங்கராயனின் சிறப்பு திருப்பலிக்கு பிறகு தேர்கள் பவனி நிகழ்ச்சி தேவாலயத்தை சுற்றி நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மறை மாவட்ட முதன்மை அருள்தந்தை அம்புரோஸ், அருள்தந்தை அந்தோணி ஜோசப் மலையடி திருப்பலி உரையாற்றினர். இதையடுத்து புனிதை மகதலா மரியாவின் பெரிய தேர் கோட்டப்பாளையம் முக்கிய வீதிகளில் இழுத்து செல்லப்பட்டது. பொதுமக்கள் தேர் மீது பொரி, கற்கண்டு தூவி வழிபட்டனர். சுற்றுப்புற கிராமங்கள், பிற மாவட்ட மக்கள் தேவாலய வளாகங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். தேர் நிலையை அடைந்த பிறகு சிறப்பு பிரார்த்தனை, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.