முகப்பு
திருச்சி

மன்னார்குடி வங்கி கொள்ளையில் ஈடுபட்டது ஏன்? கைதான ஊழியர் வாக்குமூலம்

மணப்பாறை வங்கியில் நடத்த திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் தோல்வியில் முடிந்ததால், மன்னார்குடி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வங்கி ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Updated On : 23 ஜூலை 2018, 8:44 am IST
பகிர்:

மணப்பாறை வங்கியில் நடத்த திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் தோல்வியில் முடிந்ததால், மன்னார்குடி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வங்கி ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அசேசம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மரியசெல்வம், மீரான் மொய்தீன், சுடலைமணி, முத்துக்குமார் ஆகியோர் மே 7ஆம் தேதி துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் ரொக்கம், 84 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மரியசெல்வம் மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வந்தார்.  
இந்நிலையில், மணப்பாறை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளை பதிவேடு அறைக்கு அருகில் இரண்டு துப்பாக்கிகள், திரவம், கிளிசரீன் பாட்டில் ஆகியவை கேரிப்பையில் வைக்கப்பட்டிருந்தது ஜூன் 30ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 
அவற்றை பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ராமராஜன் மகன் மரியசெல்வத்தை(31) மணப்பாறை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், மணப்பாறை வங்கிக் கிளையில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், ஆள்நடமாட்டம், பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டதாகவும், பதிவேடு அறைக்கு அருகில் துப்பாக்கிகள் வைத்ததை எடுக்க மறந்து விட்டேன். இதையடுத்து, மன்னார்குடி வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து மரியசெல்வம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments