நவ.9-இல் திருச்சி வரும் ஸ்டாலினுக்கு வரவேற்பு
துறையூரில் நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை (நவ.9) திருச்சி வருகை தரும்
துறையூரில் நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை (நவ.9) திருச்சி வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: துறையூரில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் திருமண விழா நவ.9ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நெ.1. டோல்கேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேபோல, சமயபுரம், துறையூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதால், கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.