பல லட்சம் மதிப்பிலான 7 உலோகச் சிலைகள் திருட்டு
மணப்பாறை அருகே பஜனை மடத்தில் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான 7 உலோகச் சிலைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
மணப்பாறை அருகே பஜனை மடத்தில் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான 7 உலோகச் சிலைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டி கிராமத்தில் அக்ரஹாரம் தெருவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை மடம் உள்ளது. பழமையான இந்த மடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பஜனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, சனிக்கிழமை (நவ.3) இரவு பஜனை முடிந்து கதவுகள் மூடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்பகுதி மக்கள் மடத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மட நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கொழுமண்டபத்தில் இருந்த வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய 7 உலோகச் சிலைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.