முகப்பு
திருச்சி

மணப்பாறையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு

மணப்பாறையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் நிகழ்விடத்தில் உயிரிழந்தான்.

Updated On : 5 நவம்பர் 2018, 9:16 am IST
பகிர்:

மணப்பாறையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் நிகழ்விடத்தில் உயிரிழந்தான்.
திருச்சி மாவட்ம், மணப்பாறை அருகே வெள்ளைக்கல் வீராச்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். கார் மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் மெக்கானிக் பட்டறை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் ஜார்ஜ்புஷ்(14)  அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான். அருகே இருந்த வீட்டின் மாடிப்படிகளில் ஏறியபோது படிகளில் இருந்த இரும்பு கைப்பிடியில் மின் கசிவு இருந்துள்ளது. அதனையறியாத ஜார்ஜ்புஷ் இரும்பு கைப்பிடியை பிடித்த போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்தில் இறந்தான்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டித்தனர். 
இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments