திருச்சி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்துக்கு மாவட்ட செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து உறையூர் பகுதி 60ஆவது வார்டில் நடந்த நிகழ்ச்சியில் 701 மரக்கன்றுகள்பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தில்லைநகர் பகுதி சார்பில் புத்தூர் விழியிழந்தோர் பள்ளியிலும், ஏர்போர்ட் பகுதி சார்பில் சுப்பிரமணியபுரத்திலும், பொன்மலை பகுதி சார்பில் அர்ஜூன் நகரிலும், ஜங்ஷன் பகுதி சார்பில் கே.கே.நகரிலும், உறையூர் பகுதி சார்பில் 3 இடங்களிலும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், வார்டு, பகுதி வாரியாக ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
முசிறியில்...: முசிறி கைக்காட்டியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு எம்எல்ஏ செல்வராசு தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில செயலாளருமான என்.ஆர்.சிவபதி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயம், ராஜமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ரத்தினவேல், பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு நிதியுதவி காசோலை: தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் முசிறி ஏம்எல்ஏ செல்வராசு பங்கேற்று விவசாயிகளுக்கு காசோலையினை வழங்கி சிறப்புரையாற்றினார்.
லால்குடியில்...: சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு அதிமுக கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல் தலைமை வகித்தார்.
தொடர்ந்து விழாவில் பங்கேற்ற ஏழை, எளிய மக்கள் 1000 பேருக்கு இலவச வேஷ்டி, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். விழாவில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி, மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் ஜெயகுமார், நகர கழக செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மணப்பாறையில்...
மணப்பாறையில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, நகர செயலாளர் பவுன்.எம்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மணப்பாறை எம்எல்ஏ ஆர். சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ சி.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருந்துநிலையம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய மாநிலங்களவை உறுப்பினரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான டி.ரத்தினவேல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதி ஏ.டி.எஸ். ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நெட்ஸ். இளங்கோ, சண்முக பிரபாகரன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு இணை செயலாளர்கள் மணவை ஜெ.ஸ்ரீதரன், பொன்.காவியக்கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஷ்(எ) பழனிச்சாமி, அகமது சரீப், எடத்தெரு ராமமூர்த்தி, பத்தி.பாஸ்கர், சோனா.எத்திராஜ், இளையநிலா.செல்வம், சலீம்பாட்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வையம்பட்டியில்...: ஒன்றிய செயலாளர் என்.சேது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வையம்பட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கல்பனா சேது, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கருங்குளம் பி.வி.கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேருந்துநிறுத்தம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அருகேயிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வையம்பட்டி, கே.புதுக்கோட்டை பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வையம்பட்டி கூட் டுறவு சங்க தலைவர் டி.அருண்குமார், அதிமுக இளைஞரணி செல்வம், மனோகரன், வையம்பட்டி ஊராட்சி செயலர் சக்திவேல், முன்னாள் தொகுதி செயலர் வழக்குரைஞர் முருகன், அம்மா பேரவை பொன்னுச்சாமி, டிடி.ஆர். கண்ணன், ரெங்கசாமி, முத்துச்சாமி, ராஜா, இளவரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.