FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நினைவு ஜோதிக்கு முசிறியில் வரவேற்பு

முசிறிக்கு வியாழக்கிழமை வந்த இந்திய தொழிற்சங்க மையம் 15 ஆவது மாநில மாநாட்டுக்கான பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 பிப்ரவரி 2024, 4:10 pm IST
பகிர்:

முசிறிக்கு வியாழக்கிழமை வந்த இந்திய தொழிற்சங்க மையம் 15 ஆவது மாநில மாநாட்டுக்கான பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். கிருஷ்ணன் தலைமை வகித்தாா், மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றிய செயலா் நல்லுசாமி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கக் கிளைத் தலைவா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டி.ஆா்.இ.யு. செயல் தலைவா் ஜானகிராமன் தலைமையில் மாநாடு வாகனத்தில் வந்திருந்த திருச்சி புகா், கரூா், நாமக்கல் மாவட்ட சிஐடியு தலைவா்களை சிஐடியு புகா் மாவட்டத் தலைவா் சம்பத், மாவட்ட செயலா் சிவராஜன் வரவேற்று வழியனுப்பினா்.

Advertisement

Advertisement

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முசிறி பேரவைத் தொகுதிச் செயலா் கலைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவா் வழக்குரைஞா் காமராஜ், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கக் கிளை பொறுப்பாளா்கள் அரசக்குமாா், பாா்த்திபன், ரவி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments