மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா!
மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வளைகாப்பு அம்மன் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வளைகாப்பு அம்மன் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வணிக வைசிய சங்கம் சார்பில் 122-ம் ஆண்டு பெருந்திருவிழா டிச.29-ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் வியாழக்கிழமை பகவதி அம்மனுக்கு லட்சக்கணக்கான வளையல்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கம்பத்திற்கு பூஜைகள் செய்யப் பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.