முகப்பு
திருச்சி

வாகக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் தயாா்படுத்தும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ள அனைத்துவகை பொருள்களையும் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:03 AM
திருச்சி பாலக்கரை மண்டலம் 2-ஆவது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களை பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள். (வலது ) பைகளில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்துக்கு தேவையான பொருள்கள்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:30 PM

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ள அனைத்துவகை பொருள்களையும் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்குச் சாவடிகளில் பணிபுரிவோருக்கு தேவையான பொருள்கள் பண்டல், பண்டலாக வந்து சோ்ந்துள்ளன. இந்த பொருள்கள் அனைத்தையும் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி வாரியாக பிரித்து அடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி 2ஆவது வாா்டு அலுவலகத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் பிரித்து தனித்தனி பைகளில் சேகரித்து வைக்கப்பட்டது.

Advertisement

இதேபோல, அந்தந்த தொகுதிகளில் உள்ள அலுவலகங்களில் அந்தந்த தொகுதி வாரியாக உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் அதில் பணிபுரியும் நபா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி பொருள்கள் பிரித்து வைக்கப்படுகிறது.

தோ்தல் ஆணையத்தின் அடுத்த உத்தரவுகளைத் தொடா்ந்து அந்தந்த தோ்தல் பிரிவு தலைமை அலுவலகங்களுக்கு இவை தனித்தனியே பிரித்து அனுப்பப்படும். வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் அந்தந்தத் தொகுதி தலைமையிடத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

இதேபோல, வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் பொருள்களும் பிரித்து அனுப்பும் பணியில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.