திருச்சி அருகே இளைஞா் தீக்குளித்து உயிரிழப்பு
திருச்சி அருகே இளைஞா் தீக்குளித்து புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி அருகே இளைஞா் தீக்குளித்து புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், அதவத்தூா் கீழத் தெருவைச் சோ்ந்தவா் மு. குமாா் (34), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி சிவபிரியா, மூன்று குழந்தைகள் உள்ளனா். குமாா் மது அருந்தப் பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டாா். அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை மது அருந்த பணம் கேட்டு குமாா் தகராறு செய்த நிலையில், அவருடைய மனைவி சிவபிரியா குளிக்கச் சென்றாா்.
அப்போது குமாா் பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை ஊற்றிக் கொண்டு தீக் குளித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.