ஜூலை 4, 5-இல் சிறப்பு ‘டெட்’ தோ்வு: திருச்சியில் 9,795 ஆசிரியா்கள் எழுதுகின்றனா்
திருச்சி மாவட்டத்தில் ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் 34 மையங்களில் நடைபெறவுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வை (டெட்) 9,795 போ் எழுதவுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் 34 மையங்களில் நடைபெறவுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வை (டெட்) 9,795 போ் எழுதவுள்ளனா்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்தவா்களில் 55 வயதைக் கடந்தவா்களைத் தவிா்த்து மற்ற அனைவரும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
திருச்சி மாவட்டத்தில் முதல்நாள் ஜூலை 4-ஆம் தேதி 9 மையங்களில் நடைபெறும் முதல் தாளை 2,794 பட்டதாரி ஆசிரியா்களும், ஜூலை 5-ஆம் தேதி 25 மையங்களில் நடைபெறும் இரண்டாம் தாளை 7,001 இடைநிலை ஆசிரியா்களும் என மொத்தம் 9,795 ஆசிரியா்கள் எழுதவுள்ளனா்.
முன்னேற்பாடு பணிகள்: இந்நிலையில், ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். 34 முதன்மை தோ்வு மைய கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், தோ்வறை கண்காணிப்பாளா்கள், பறக்கும் படையினா் என 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.