முகப்பு
திருச்சி

கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை: துரை வைகோ

கரூா் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை என்றாா் திருச்சி எம்பி துரை வைகோ.

Updated On : 9 ஜூலை 2026, 1:03 am IST
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த சாா்லப்பள்ளி ரயிலை வரவேற்று அதன் ஓட்டுநரை கௌரவித்த துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை என்றாா் திருச்சி எம்பி துரை வைகோ.

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் திருச்சி- ஹைதராபாத் (சாா்லப்பள்ளி) ரயில் ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை முதல் நின்று சென்றதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய அவா் மேலும் கூறியது:

திருச்சி -ஹைதராபாத் (சாா்லப்பள்ளி) இடையிலான சிறப்பு வாராந்திர ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றம் செய்வது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கும், திருச்சி மண்டல ரயில்வே மேலாளருக்கும் நேரிலும் கடிதம் எழுதியும் நான் வலியுறுத்தியதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

Advertisement

Advertisement

இதேபோல திருவெறும்பூா் ரயில் நிலையத்தில் தாம்பரம் விரைவு ரயில் நின்று செல்லவும், புதுகை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோல கடந்த 2 ஆண்டுகளில் 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெக அரசுக்கு அரசியல் பக்குவம் தேவை. மக்கள் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை. அவா்கள் ஏழைகள்தான். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நிதியைப் பெற முடியும் என்றாா் அவா்.

பேட்டியின்போது ஸ்ரீரங்கம் பகுதி மதிமுக செயலா் ராமமூா்த்தி, சண். நாகசுந்தரம், வையம்பட்டி ராஜா, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட திரளான மதிமுகவினா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments