பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருச்சியில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் அண்மையில் 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சியில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் அண்மையில் 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி இலுப்பூா் சாலை ஐயப்பா நகரைச் சோ்ந்த 51 வயது பெண், கே.கே.நகரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 போ் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களில் ஒருவா் வாகனத்தில் இருந்து இறங்கி கடைக்குள் சென்று பொருள்களின் விலை குறித்து கேட்டுக்கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராத நேரத்தில் கடையிலிருந்த முட்டையை எடுத்து, அப்பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மூவரும் தப்பினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.