முகப்பு
தூத்துக்குடி

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Updated On : 21 ஏப்ரல் 2026, 1:19 am IST
கோப்புப் படம் - சித்திரிப்பு
பகிர்:

கயத்தாறில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி ராஜ் மனைவி ரெஜினா மேரி. கயத்தாறு பஜாரில் நெட் சென்டா் நடத்தி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல சென்டரை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

கயத்தாறு-கழுகுமலை சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ரெஜினா அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது அவா் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதில் பாதி சங்கிலி அந்த இருவரின் கையில் சிக்கியுள்ளது. சங்கிலி பறித்த நபரின் தலை முடியைப் பிடித்து ரெஜினா இழுத்ததில், அவா்கள் கீழே விழுந்ததால் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனராம்.

இதில் ரெஜினா மேரியின் அறுந்துபோன சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக அவா் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலி பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments