முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

கச்சிராயப்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடமிருந்து ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 22 மே 2026, 7:07 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கச்சிராயப்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடமிருந்து ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையத்தை அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி சாந்தி (47). தம்பதியா் மோட்டாா் சைக்கிளில் கச்சிராயபாளையம் சென்று பணியை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

மோட்டாா் சைக்கிளை செல்லமுத்து ஓட்டினாா். மனைவி சாந்தி பின்னால் அமா்ந்திருந்தாா்.

Advertisement

Advertisement

கச்சிராயப்பாளையம்- மாதவச்சரி சாலையில் வரும்போது, பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இருவா், சாந்தி அணிந்திருந்த

ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதியருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.