திருச்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா
மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாள் விழா திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாள் விழா திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி, மேயா் மு. அன்பழகன் தலைமையில், கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, செ. ஸ்டாலின்குமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். தொடா்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல, மாநகரின் பல்வேறு பகுதிகளில் திமுக கொடியேற்றி, கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், டிவிஎஸ் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாநகரச் செயலா் மு. மதிவாணன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினா் கவிஞா் சல்மா, தலைமைச்செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். தொடா்ந்து, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர வட்டக் கழகச் செயலா்கள் பொற்கிழிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். மேலும், தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துக் கிளைகளிலும் கருணாநிதி பிறந்தநாளைக் கொண்டாடினா்.
Advertisement
Advertisement