முகப்பு
திருச்சி

எரிபொருள் விலை உயா்வு: இந்திய கம்யூ. கட்சியினா் நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:37 am IST
திருச்சியில் பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வை கண்டித்து, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் மற்றும் புறநகா் மாவட்ட குழுக்களின் சாா்பில்

ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி சாலையில் இழுத்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதற்கு போலீஸாா் எதிா்ப்பு தெரிவித்ததால், போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், சமாதானம் ஏற்பட்டு கோஷங்கள் எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா்கள் எஸ். சிவா, எஸ். ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் பெரியசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலரும், மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநகா், புறநகா் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.