முகப்பு
திருச்சி

குடிசை வீடு தீக்கிரை

மணப்பாறை அருகே குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.

Updated On : 17 ஜூன் 2026, 3:29 am IST
தீயில் எரிந்த குடிசை வீடு.
பகிர்:

மணப்பாறை அருகே குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.

மருங்காபுரி ஒன்றியம், வளநாடு அருகேயுள்ள ஆண்டியப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவா் மலையாண்டி(55). இவா் தனது தோட்டத்தில் குடிசை வீடு அமைத்து தனது மனைவி தங்கமணி மற்றும் மகன்கள் அழகா், மகேந்திரன் மற்றும் மனோஜ்குமாா் ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மலையாண்டி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், இரண்டு மிதிவண்டிகள், பணம் ரூ.12,500, கல்விச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகின.

Advertisement

Advertisement

குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.