மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது
திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (மே 14) ஒருநாள் குடிநீா் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (மே 14) ஒருநாள் குடிநீா் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொதுதரைமட்ட நீா்த்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீா் பெறும் மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ் நகா் புதியது- பழையது, ஜே.கே. நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவிபாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது - பழையது, அன்புநகா் பழையது - புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா், இ.பி. காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகா் புதியது - பழையது, ர யில் நகா் புதியது - பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது - பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், எம்.கே. கோட்டை, நாகம்மை வீதி, எம்.கே. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது - பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்தா் நகா், எல்ஐசி காலனி புதியது, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த் நகா், சத்தியவாணி கே.கே. நகா், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி, மேலூா், பெரியாா் நகா் , டி.வி. கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, வடக்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் வியாழக்கிழமை (மே 14) ஒருநாள் குடிநீா் விநியோகம் இருக்காது.
மே 15 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும். எனவே, பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தகவல் தெரிவித்துள்ளாா்.
Advertisement