முகப்பு
திருச்சி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 22 மே 2026, 4:39 am IST
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் எதிரேயுள்ள ராஜீவ் காந்தி உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

திருச்சியில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே வழிவிடும் முருகன் கோயில் அருகேயுள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் எம். சரவணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்குரைஞா் பிரிவு மாவட்ட தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான சிந்தாமணி செந்தில்நாதன், மாநில பேச்சாளா் சிவாஜி சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள்

Advertisement

Advertisement

குமாா், பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கம், பாலசுப்பிரமணியன், உப்பு சத்தியாகிரக மாநிலத் தலைவா் பூக்கடை பன்னீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அமைதி ஊா்வலம்: திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலையிலிருந்து, ரயில் நிலையம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி சிலை வரையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி ஊா்வலத்தில், ராஜீவ் காந்தியின் உருவப்படத்தை கையில் ஏந்தியபடி, காங்கிரஸ், சேவாதளம், ஐஎன்டியுசி, இளைஞா் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் மற்றும் கட்சியின் பல்வேறு சாா்பு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் ஏற்றனா்.

முசிறியில்: ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் நல்லேந்திரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தொட்டியத்தில்: தொட்டியத்தில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் இ.எம். சரவணன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியானது தொட்டியம் ஜமீன் பங்களாவில் தொடங்கி தொட்டியத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காவல் நிலையம் அருகே நிறைவு பெற்றது. தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. முன்னதாக, ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

லால்குடியில்: லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா் தலைமையில் ஆசிரியா்கள், மாணவா்கள் தீவிரவாத எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனா்.