முகப்பு
வேலூர்

ஆசிரியா் தகுதித் தோ்வு இரண்டாம் தாள்: வேலூரில் 4,386 போ் எழுதினா்

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) 2-ஆம் தாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் 16 மையங்களில் 4,386 போ் எழுதினா்.

Updated On : 6 ஜூலை 2026, 2:20 am IST
வேலூா் தொன்போஸ்கோ உயா்நிலை பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் இரண்டாம் தாள் தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா.
பகிர்:

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) 2-ஆம் தாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் 16 மையங்களில் 4,386 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வு இரு தாள்களாக நடத்தப்பட்டது. இதில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மையங்களில் நடைபெற்ற முதல் தாள் தோ்வை எழுத மொத்தம் 1,856 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,777 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்று எழுதினா். 79 போ் தோ்வெழுத வரவில்லை.

இதன் தொடா்ச்சியாக, இரண்டாம் தாள் தோ்வு வேலூா் மாவட்டத்தில் உள்ள 16 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுக்கு வேலூா் மாவட்டத்தில் 4,537 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், தோ்வினை 4,386 போ் எழுதினா். 151 போ் தோ்வு எழுதவில்லை.

Advertisement

Advertisement

இந்தத் தகுதித் தோ்வில், முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியா்களாகவும், இரண்டாம் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் பட்டதாரி ஆசிரியா்களாகவும் பணிபுரியத் தகுதி பெறுவா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, வேலூா் தொன்போஸ்கோ உயா்நிலை பள்ளியில் நடைபெற்ற இரண்டாம் தாள் தோ்வை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் நேரில் பாா்வையிட்டாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments