இரு சக்கர வாகனங்கள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு
வேலூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
வேலூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
வேலூா் சின்னஅல்லாபுரம் பனந்தோப்பு பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் இளங்கோ (53),. இவா், தனது உறவினரான தினேஷ் என்பவருடன் வள்ளிமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை தினேஷ் ஓட்டிச் சென்றுள்ளாா்.
வேலூா் காவல் நிலையம் எதிரே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது இவா்களது வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளங்கோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இளங்கோ உயிரிழந்தாா்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.