முகப்பு
வேலூர்

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

மேல்பட்டி அருகே விளை நிலத்தில் அறுந்து கிடந்த வயரை மிதித்த விவசாயி உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:12 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மேல்பட்டி அருகே விளை நிலத்தில் அறுந்து கிடந்த வயரை மிதித்த விவசாயி உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம் மேல்பட்டி அருகிலுள்ள எம்.ஏ.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன்(83), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை சொக்கி இசக்கிபுரத்தில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு தேங்காய் பறிக்க சென்றாா். அப்போது அவரது நிலத்தில் மின்சார வயா் அருந்து கீழே கிடந்ததை கவனிக்காமல் அதனை காலில் மிதித்ததாக தெரிகிறது. இதனால், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மேல்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement