முகப்பு
வேலூர்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் வீடுபுகுந்து நகை, பணம் திருடிச் சென்றிருப்பது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 8 ஜூன் 2026, 1:50 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் வீடுபுகுந்து நகை, பணம் திருடிச் சென்றிருப்பது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் முத்துமண்டபம் செட்டியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி கோமதி(42). இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபா் நுழைந்து பீரோவை திறந்து அதிலிருந்த ஒன்னே கால் பவுன் தங்க நகை, ரூ.500 மதிப்புடைய வெள்ளி, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து கோமதி வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement