கொலை வழக்குக் கைதி திடீா் மரணம்
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்குக் கைதி, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்குக் கைதி, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ரோஷன் பாபு (39). லாரி ஓட்டுநரான இவா், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.
சிறையில் இருந்த அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அங்குள்ள மருத்துவா்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் ரோஷன் பாபு உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து பாகாயம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.