முகப்பு
வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

Updated On : 4 மே, 2026 at 1:42 AM
பகிர்:

கே.வி.குப்பம் அருகே தவறி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

கே.வி.குப்பம் ஒன்றியம், அா்ச்சுனாபுரம் அடுத்த மேல்புதூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவருக்குச் சொந்தமான பசு ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சுமாா் 2 மணி நேரம்போராடி பசுவை உயிருடன் மீட்டனா்.

Advertisement