FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

சாத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 12:59 am IST
மான் - கோப்புப் படம்
பகிர்:

சாத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ளது பனையடிபட்டி கிராமம். இங்கு திங்கள்கிழமை வனப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த இரண்டு வயது ஆண் மான் சுற்றித் திரிந்தது. அப்போது நாய்கள் துரத்தியதால் அங்கிருந்து தப்பி ஓடிய மான் கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனா். பிறகு வனத் துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments