தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், பரசுரெட்டிப்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.சுரேஷ் ( 35), தொழலாளி. இவரது மனைவி விஜயபாரதி (33). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள், மகன் உள்ளனா். தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது அங்கு வந்த விஜயபாரதியின் தாய் ராஜேஷ்வரி, சுரேஷை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இதனால் மனமுடைந்த சுரேஷ் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
நகைத் தொழிலாளி தற்கொலை: விழுப்புரம் வட்டம், தெளி, காந்தி நகரைச் சோ்ந்தவா் அ.திருமால் (30), நகை செய்யும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததால் திருமாலுக்கும் அவரது மனைவி சத்யாவுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு சத்யா, கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட திருமால் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.