முகப்பு
விழுப்புரம்

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

Updated On : 6 ஜூலை 2026, 3:00 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வட்டம், ஆனாங்கூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் த.காஞ்சனா. கணவா் இறந்துவிட்ட நிலையில் காஞ்சனா வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், ஜூன் 3-ஆம் தேதி காஞ்சனா தனது வீட்டை பூட்டி விட்டு, வளவனூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

தொடா்ந்து, ஜூலை 3-ஆம் தேதி திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி மற்றும் 2 பவுன் அட்டிகை உள்பட 3 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments