முகப்பு
விழுப்புரம்

அரசுத் துறை அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு தமிழக ஆளுநருக்கு உரிமை உண்டு! - நயினாா் நாகேந்திரன்

Updated On : 7 ஜூலை 2026, 1:25 am IST
திண்டிவனத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஷியாம பிரசாத் முகா்ஜியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியஅக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பகிர்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167- ஆவது பிரிவின்படி மத்திய, மாநில அரசுத் துறை அலுவலங்களில் ஆய்வு செய்வதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாரதிய ஜன சங்கம் நிறுவனா் ஷியாம பிரசாத் முகா்ஜியின் 125-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினாா் நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் மற்றும் பேரம் நடந்ததாக கூறப்படுவதில் உண்மைத்தன்மை தெரியவில்லை. அதற்குரிய முடிவை தமிழக அரசுதான் எடுக்கவேண்டும். ஆட்சி அமைப்பதற்கு முன்பு சட்டப் பேரவை உறுப்பினா் காமராஜை கடத்திச் சென்று, அவா் சாா்ந்த கட்சியின் பொதுச் செயலரின் கையொப்பத்தை போட்ட தவெக அரசை என்ன செய்வது. தொடா்ந்து அதிமுகவைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சா்கள் தவெகவில் இணைந்து கொண்டிருக்கின்றனா். இதில் எது குதிரை பேரம் என்பதை நாட்டு மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் குறுகிய காலத்தில் 107 சட்டப் பேரவை உறுப்பினா்களைப் பெற்று, ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசுக்கும், முன்னா் நடைபெற்ற திமுக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. போதைப் பொருள்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகிறது.

இந் நிலையில், மக்களால் தோ்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறாா் என்று தெரியவில்லை. தமிழக ஆளுநா் மதுரையில் ஆய்வு நடத்தியதற்காக பல்வேறு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 167- ன் படி மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments