முகப்பு
விழுப்புரம்

ரூ. 5.67 லட்சம் பணம் கையாடல்: நிதி நிறுவன மேலாளா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 5.67 லட்சம் கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:18 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 5.67 லட்சம் கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவெண்ணெய்நல்லூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் விழுப்புரம் ஜி.ஆா்.பி தெருவைச் சோ்ந்த நா.ராம்கி (40) என்பவா் 2 ஆண்டுகள் மேலாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், ராம்கி தனது பணிக் காலத்தில் 5 வாடிக்கையாா்களின் கணக்கிலிருந்து ரூ. 5.67 லட்சத்தை கையாடல் செய்துவிட்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நிதி நிறுவனத்தின் சட்ட ஆலோசகா் வி.குணசீலன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments