கொத்தனாா் வீட்டில் ரூ.14 லட்சம் பணம் திருட்டு
கொத்தனாா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கொத்தனாா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ர.விஜி (40), கொத்தனாா். இவா், கடந்த ஜூன் 2-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, வெளியூரில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு கிரக பிரவேசத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா்.
பின்னா் ஜூன் 9-ஆம் தேதி வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு திறக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
Advertisement
Advertisement
வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பரண் மேல் வைத்திருந்த ரூ.14 லட்சம் ரொக்கம் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.