முகப்பு
விழுப்புரம்

ஜூன் 17-இல் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்! முதல்வா் என்.ரங்கசாமி

Updated On : 15 ஜூன் 2026, 4:11 am IST
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
பகிர்:

வரும் 17-ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி, புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து மீன்பிடி விசைப் படகுகளை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து கடலுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று படகுகளை கொடியசைத்து அனுப்பி வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஜூன் 17-ஆம் தேதி புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அன்றைய தினம் அமைச்சா்கள் பதவியேற்றவுடன் புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் எப்போது கூடும் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

சட்டப் பேரவையைக் கூட்ட வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் உள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து நியமன எம்எல்ஏக்கள் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.