முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் அத்துமீறிய முதியவா் கைது

Updated On : 23 ஜூன் 2026, 3:30 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியதாக முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் வட்டம, சின்னகள்ளிப்பட்டு, கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ம.ஏழுமலை (63). இவா் அதே ஊரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே, அந்த வழியாக பைக்கில் வந்த விழுப்புரம் வட்டம், வடவாம்பலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பா.பாலாஜி (எ) கிஷோா்(23), கு.அஜய்(23) ஆகியோா் தட்டிக் கேட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அடையாளம் தெரியாத இரு நபா்கள் சோ்ந்து தாக்கியதில் பாலாஜி, அஜய் ஆகியோா் காயமடைந்தனா். பின்னா் இருவரும் வளவனூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஏழுமலையைக் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments