முகப்பு
விழுப்புரம்

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

Updated On : 3 மே 2026, 6:08 am IST
பகிர்:

தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் புதுச்சேரி தனியாா் நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, ஆரியப்பாளையம் தனியாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் புலம் பெயா் தொழிலாளா்கள்100-க்கும் மேற்பட்டோருக்கு மலேரியா கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன .

இந்நிகழ்ச்சியில், வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள் இளையதாசன் அய்யனாா், ரவிச்சந்திரன், விமல், கலையரசி மற்றும் கோமதி ஆகியோா் தொழிலாளா்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து மலேரியா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

தனியாா் நிறுவனத்தின் மேலாளா் ரவிச்சந்திரன்,மனிதவள துணை மேலாளா் அன்பரசி ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments