முகப்பு
கடலூர்

நிலம் கையப்படுத்த எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்குத்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:45 am IST
பகிர்:

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்குத்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்டது தென்குத்து கிராமம். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தக் 
கிராமம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு மிக அருகில் உள்ளதால், 2016-ஆம் ஆண்டு முதல் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், தமிழக அரசு தென்குத்து பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளை சுரங்கம் 
1 -ஏ விரிவாக்கத்துக்காக கையகப்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு வருகிறதாம்.
தென்குத்து பகுதியில் சுரங்க விரிவாக்கத்தைச் செயல்படுத்தினால், என்.எல்.சி. நிறுவனம், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி 
முதல் ரூ. 1,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்ற முழு 
விவரத்துடன், மாவட்ட ஆட்சியரிடம் தென்குத்து கிராம மக்கள் சார்பில், மூன்று முறை மனு அளிக்கப்பட்டது.
மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் திறந்தவெளி சுரங்கத்தைச் செயல்படுத்த 2041-ஆம் ஆண்டு வரை மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னுமுள்ள 23 ஆண்டுகளுக்குத் தேவையான பழுப்பு நிலக்கரி, முன்னரே என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்தி வைத்துள்ள பயன்படுத்தப்படாத நிலங்களில் உள்ளது என்பதை தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் குறிப்பிட்டுள்ளதாம்.
எனவே, என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்தை தென்குத்து கிராமத்தில் செயல்படுத்தத் தேவையில்லை என்றும், இதற்கு எதிப்புத் தெரிவித்தும் வள்ளலார் விவசாயிகள் - தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத் தலைவர் டி.ஆர்.ராமலிங்கம் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் பழனிவேல், அன்பழகன், கொளஞ்சி, பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அந்தச் சங்கத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள், தென்குத்து கிராம மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments