நெய்வேலியில் அனைத்துக் கட்சிகள் கூட்டம்
நெய்வேலியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெய்வேலியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நெய்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி வரவேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் தாமோதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் துரை.மருதமுத்து, ஒன்றிய மதிமுக செயலர் செந்தில்குமார், கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கடேசன், பாலமுருகன், மனித நேய மக்கள் கட்சியின் பக்ரூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.