பள்ளி ஆண்டு விழா
நெல்லிக்குப்பம் செயின்ட் டோமினிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் செயின்ட் டோமினிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஜி.ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். புதுச்சேரி போப் ஜான் கல்லூரி முதல்வர் அருள்தந்தை சாமிநாதன், கடலூர் குருமடத் தந்தை ரோசாரியோ, பணிக்கன்குப்பம் பங்குத்தந்தை மரிய ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பங்கேற்று, சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரிச் செயலர் விக்டோரியா, பாலிடெக்னிக் செயலர் ரெக்சி, தட்டாஞ்சாவடி பள்ளி முதல்வர் மரியதங்கம், பணிக்கன்குப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.