முகப்பு
கடலூர்

உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் திங்கள்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 25 டிசம்பர் 2018, 8:52 am IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் திங்கள்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை அமலாக்க வேண்டும். ஆண்,பெண் பாகுபாடு இல்லாமல் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 
அனைத்து முறைசாரா பெண் தொழிலாளர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு நிவாரணம் வழங்க வேண்டும். 
இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பணியிடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு தனி ஓய்வறை, கழிப்பறை வசதி செய்துத்தர வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புகார் கமிட்டி அமைக்க வேண்டும். அனைத்து நகரங்களிலும் பெண்களுக்கு தனிப் பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு, இணை ஒருங்கிணைப்பாளர் கே.சாவித்திரி தலைமை வகிக்க, இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சாந்தகுமாரி முன்னிலை வகித்தார்.
பெண்கள் கூட்டமைப்பு  சார்பில் எஸ்.ஜெயஸ்ரீ, சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, உழைக்கும் பெண்கள் குழு எம்.சூரியகலா, எம்.மனோரஞ்சிதம், பொது தொழிலாளர் சங்கம் வி.ரேனுகா, தையல் சங்கம் டி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments