வெண்மணி தியாகிகள் நினைவு தினம்
வெண்மணி தியாகிகள் 50-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சிதம்பரம், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சிகள்
வெண்மணி தியாகிகள் 50-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சிதம்பரம், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று கட்சி கொடியேற்றி கல்வெட்டுகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டச் செயலர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட க்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலர்கள் சதானந்தம் (புவனகிரி), எஸ்.ஜி.ரமேஷ்பாபு (பரங்கிப்பேட்டை), வாஞ்சிநாதன் ( கீரைபாளையம்), சிதம்பரம் நகரச் செயலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பண்ருட்டி: இதேபோல, பண்ருட்டி ஒன்றிய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தையொட்டி சூரக்குப்பம், ராயர்பாளையம், நத்தம், வீரப்பெருமாநல்லூர், காமாட்சிப்பேட்டை, மேலிருப்பு, காட்டுப்பாளையம், தெற்கு மேல்மாம்பட்டு, ஆண்டிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களில் கொடியேற்றுதல், பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருஅரசு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ், ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் பன்னீர், தனபால், ஜெகதீசன், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் குமரகுருபரன், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கே.வடமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.