சாரணர் இயக்க விருதுக்கான தேர்வு முகாம்
சாரண-சாரணீயர் இயக்கத்தின் ராஜ்ய புரஷ்கார் ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம், நெய்வேலி வட்டம் 26-இல் உள்ள என்எல்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சாரண-சாரணீயர் இயக்கத்தின் ராஜ்ய புரஷ்கார் ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம், நெய்வேலி வட்டம் 26-இல் உள்ள என்எல்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை முகாம் தொடங்கியது. சனிக்கிழமை காலையில் நடைபெற்ற முகாமுக்கு, நெய்வேலி சாரண மாவட்டச் செயலர் சேகர் தலைமை வகித்தார். சாரண மாவட்ட அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சாரண இயக்க முதன்மை ஆணையரும், என்எல்சி கல்வித் துறை துணைப் பொது மேலாளருமான நெடுமாறன் பங்கேற்றுப் பேசினார்.
முகாமில் சாரண இயக்க பிரிவுக்கு வீரப்பா, சக்திவேல், சாரணீயர் இயக்க பிரிவுக்கு கரோலின், பிலோமினால் ஆகியோர் முகாம் தலைவர்களாக பொறுப்பேற்று பிரவேஷ், பிரதமசோபன், துவித்யசோபன், துருத்தியசோபன் ஆகிய பாடப் பிரிவுகளில் ஆளுநர் விருதுக்கான தேர்வை நடத்தினர்.
முன்னதாக பல்வேறு பாடப் பிரிவுகளில் சாரண பயிற்றுநர்கள் பாக்கியராஜ், காமராஜ், பார்த்திபன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், சாரணீய பயிற்றுநர்கள் மாலதி, ஜெயந்தி, சுமதி, ஸ்டெல்லா, மேரி, மகேஸ்வரி, ஜெனீத்தாஆகியோர் பயிற்சிகளைஅளித்து, விருது தேர்வுக்கு சாரண, சாரணீயர்களை தயார்படுத்தினர்.
முகாமில் விருத்தாசலம், நெய்வேலி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 440 பேர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.