பாதுகாப்பான ரயில் பயணம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் அணில் சந்த், துணை உதவி ஆய்வாளர் பினு ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது, மாணவர்கள் ரயிலில் செல்லும்போது தங்களது உடைமைகளை இருக்கையின் கீழ் பகுதியில் வைத்து பூட்டி வைக்க வேண்டும்.
அறிமுகமில்லாத நபர்களிடம் உணவுப் பொருள்களை வாங்கி சாப்பிடக் கூடாது. படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது. தண்டவாளத்தைக் கடக்க நடைமேம்பாலத்தை உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், எந்தவித தகவலாக இருந்தாலும் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முகாமில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் உதயகுமார், கோபால், ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.