முகப்பு
கடலூர்

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 9:21 am IST
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட நிர்வாகி டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட நிர்வாகி டி.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடிகை 
ஸ்ரீபிரியா, காவல் துறை முன்னாள் உயரதிகாரி ஏ.ஜி.மெளரியா, சவுரிராஜன், சி.கே.குமரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீபிரியா பேசியதாவது: மக்களிடம் மறதி என்ற நோய் இருப்பதால் பழைய தவறுகளை மறந்து மீண்டும், மீண்டும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். எனவே, அனைவரும் அரசியல் அறிவு பெற வேண்டும். வாக்களிக்கும் முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார். 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருகிறது. ஆட்சி சரியாக இருந்தால் இது போன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. சிறுமிகள் வன்கொடுமை போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆணும், பெண்ணும் சரிசமம் என சிறுவயது முதலே குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி அவர்களை வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மேற்கு மாவட்ட நிர்வாகி கே.ரபீக் வரவேற்றார். கிழக்கு மாவட்ட நிர்வாகி எஸ்.சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments