முகப்பு
கடலூர்

பண்ருட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் ஆய்வு

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:53 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பி.பொன்னையா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக குறிப்பேடுகள், வரவு - செலவு இருப்புகள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3.63 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த பி.பொன்னையா, மே மாதத்துக்குள் இந்தக் கட்டடத்தை கட்டி முடித்து திறக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், புதிய அலுவலகத்துக்குத் தேவையான அறைகலன்கள் வாங்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கும்படியும் கோட்டப் பொறியாளரிடம் அறிவுறுத்தினாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் சரண்யா, கடலூா் செயற்பொறியாளா் தணிகாசலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஷபானா அஞ்சும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், சக்தி, பொறியாளா் ஜெய்சங்கா் ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து, அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆய்வுக்குப் புறப்பட்டாா்.

Advertisement

Advertisement