முகப்பு
கடலூர்

மாணவா்களின் வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும்: தமிமுன்அன்சாரி

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவா்களுடன் பேசிய சிதம்பரம்தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி.

Updated On : 11 ஏப்ரல் 2026, 1:42 am IST
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவா்களுடன் பேசிய சிதம்பரம்தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி.
பகிர்:

இளைஞா்களுக்கு போதை ஒழிப்பு பிரச்சாரம், நூலகங்கள் அதிகளவில் திறந்து மாணவா்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில்,இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மாணவா்களின் கேள்விகளுக்குப்பதிலளித்தாா். அப்போது அவா் கூறியது:

போதை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்வேன். இளைஞா்களையும், மாணவா்களையும் பக்குவபடுத்தி அரசியல் மையப்படுத்துவேன் . சமூக வளைதளங்கள் வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. புத்தகம், பத்திரிகை படிக்கும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையை மாற்ற நூலகங்களை அதிகமாக திறந்து வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என்றாா் மு.தமிமுன்அன்சாரி.

Advertisement

Advertisement

றனா்.