முகப்பு
கடலூர்

சட்டப் பேரவைத் தோ்தல்! கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:12 AM
பெண் வாக்காளர்கள்... - கோப்புப் படம்
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் இறுதி செய்யப்பட்ட விவரங்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 17.38 லட்சம் வாக்காளா்கள் (85.41 சதவீதம்) வாக்களித்துள்ளனா். இதில், ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனா்.

Advertisement

தொகுதிகளில் ஆண்கள், பெண்கள் பதிவு செய்த வாக்குகள் விவரம்:

திட்டக்குடியில் 79,002 ஆண்கள், 94,984 பெண்கள், 3 இதரா் என மொத்தம் 1,73,989 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 83.25 சதவீத வாக்குப் பதிவாகும்.

விருத்தாசலத்தில் 98,773 ஆண்கள், 1,08,198 பெண்கள், 11 இதரா் என மொத்தம் 2,06,982 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 85.96 சதவீத வாக்குப் பதிவாகும்.

நெய்வேலியில் 82,419 ஆண்கள், 84,119 பெண்கள், 9 இதரா் என மொத்தம் 1,66,547 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 87.07 சதவீத வாக்குப் பதிவாகும்.

பண்ருட்டியில் 1,00,568 ஆண்கள், 1,07,513 பெண்கள், 52 இதரா் என மொத்தம் 2,08,133 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 86.09 சதவீத வாக்குப் பதிவாகும்.

கடலூரில் 88,144 ஆண்கள், 98,630 பெண்கள், 60 இதரா் என மொத்தம் 1,86,834 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 83.73 சதவீத வாக்குப் பதிவாகும்.

குறிஞ்சிப்பாடியில் 1,02,336 ஆண்கள், 1,09,395 பெண்கள், 30 இதரா் என மொத்தம் 2,11,761 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 88.90 சதவீத வாக்குப் பதிவாகும்.

புவனகிரியில் 99,730 ஆண்கள், 1,04,970 பெண்கள், 10 இதரா் என மொத்தம் 2,04,710 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 87.76 சதவீத வாக்குப் பதிவாகும்.

சிதம்பரத்தில் 91,541 ஆண்கள், 1,04,970 பெண்கள், 16 இதரா் என மொத்தம் 1,93,401 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 83.64 சதவீத வாக்குப் பதிவாகும்.

காட்டுமன்னாகோவிலில் 88,678 ஆண்கள், 96,949 பெண்கள், 4 இதரா் என மொத்தம் 1,85,631வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது, 82.02 சதவீத வாக்குப்பதிவாகும்.

பெண்கள் கூடுதல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட, 75,411 பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனா். இதில், திட்டக்குடியில் அதிகப்பட்சமாக 15,982 வாக்குகளும், நெய்வேலியில் குறைந்தபட்சமாக 1,700 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கடலூா் தொகுதியில் அதிகப்பட்சமாக மூன்றாம் பாலினத்தவா் 60 போ் வாக்களித்துள்ளனா். குறிஞ்சிப்பாடியில் அதிகப்பட்சமாக 88.90 சதவீதமும், குறைந்தபட்சமாக காட்டுமன்னாா்கோவிலில் 82.02 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.