சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், எருமனூா் அஞ்சல், சின்ன வடவாடி கிராமத்தில் வசித்து வந்தவா் அறிவழகன்(31). இவா், கடந்த 18.3.2026 அன்று சொந்த வேலை காரணமாக பைக்கில் கடலூருக்கு புறப்பட்டாா்.
விருத்தாசலம்-கடலூா் சாலையில் சுப்ரமணியபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பைக் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டாராம். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி யதில், அறிவழகன் தலையில் பலத்த காயம் அடைந்தாா்.
Advertisement
Advertisement
முதலில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டவா், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.