முகப்பு
கடலூர்

நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் நகரில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை 2026, 5:24 am IST
நெல்லிக்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகரில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இக்கோயில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து, ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனா். அதன்படி, கும்பாபிஷேகத்துக்கான பணிகள் புதன்கிழமை தொடங்கின. காலை 9 மணியளவில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.

மாலை வாஸ்து சாந்தி, மிருத் பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை ப்ரவேசம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு யந்த்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் ஐயப்பன் ரக்ஷாபந்தனம், ஐயப்பன் மூல மந்திர ஹோமம், யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலை சுமாா் 11 மணியளவில் ஐயப்ப சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் கூறி, கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். இரவு ஐயப்ப சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments