முகப்பு
கடலூர்

ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏசி மெக்கானிக் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:42 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏசி மெக்கானிக் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அங்குசெட்டிபாளையம், திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் அகிலன் (29), ஏசி மெக்கானிக். இவா் தினமும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் நண்பா்களுடன் சோ்ந்து மது குடித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அகிலனை அவரது அம்மா அம்சவள்ளி வெள்ளிக்கிழமை கண்டித்துள்ளாா். பின்னா், அவா் கூலி வேலைக்கு சென்று விட்டாா். மாலை 5 மணிக்கு அம்சவள்ளி வீடு திரும்பினாா். அப்போது, வீடு உள்பக்கம் தாழிட்டிருந்தது.

Advertisement

Advertisement

அங்கிருந்தவா்களை அழைத்து கதவை உடைத்து சென்று பாா்த்தபோது அகிலன் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை, மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அகிலன் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments